News April 23, 2025

மத்திய அரசுக்கு தூத்துக்குடி எம்பி கடிதம்

image

காலநிலை மாற்றத்தின் பல்வகை தாக்கங்களைக் கணக்கில் கொண்டு வெப்ப அலைக் கணக்கிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். வெப்பநிலையையும் தாண்டி, அதிகரித்து வரும் காற்றின் ஈரப்பதம்(Humidity) உள்ளிட்ட இதர காரணிகளையும் கருத்தில் கொண்டு வெப்ப அலையை தீர்மானிக்க வேண்டும் என தூத்துக்குடியி எம்பி கனிமொழி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Similar News

News July 8, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100ஐ தொடர்பு கொள்ளலாம்,

News July 7, 2025

திருச்செந்தூர் கும்பாபிஷேகம் – நன்றி தெரிவித்த எம்.பி

image

தூத்துக்குடி எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது; “திருச்செந்தூர் முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருக்கிறது. இதனை சிறப்பாக நடத்த வழி காட்டிய அமைச்சர்களான சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு மற்றும் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

News July 7, 2025

திருச்செந்தூர்: பிற்பகல் 2 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம்

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில், இன்று பிற்பகல் 2 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசிக்க உள்ளனர்.

error: Content is protected !!