News April 23, 2025
அரிசி கேழ்வரகு மாவிற்கு இனி ‘அக்மார்க்’ முத்திரை

மதுரை : அரிசி மாவு, கேழ்வரகு மாவிற்கான ‘அக்மார்க்’ அங்கீகாரத்தை மத்திய அரசு முதன்முறையாக வழங்கியுள்ள நிலையில், உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மதுரை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் மாவு வகைகளை ஆய்வகத்தில் ஆய்வு செய்து தரச்சான்றிதழ் பெற கூடுதல் விவரங்களுக்கு 96292 88369 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News July 8, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (07.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
தந்தை மகனுக்கு அறிவாள் வெட்டு – காவல்துறை விளக்கம்

மதுரை சோலை அழகுபுரத்தில், கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் தந்தை மகனுக்கு அறிவாள் வெட்டு என்று இன்று ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், காவல்துறை சார்பில் மறுப்பு அறிக்கை வெளியாகியுள்ளது. சொத்துத் தகராறில் கார்த்திக் மற்றும் அவரது மாமா நாகரத்தினம் என்பவருக்கும் இடையே நடந்த பிரச்சினையில் எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
மதுரை: CM அதிரடி உத்தரவு

மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் அதிரடி உத்தரவு போட்டுள்ளார். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை ஒன்-டூ-ஒன் என்ற தலைப்பில் முதல்வர் சந்தித்து வருகிறார்.