News April 23, 2025
e-NAM வேளாண் சந்தை திட்டம்: இனி ஆதார் கட்டாயம்

e-NAM வேளாண் சந்தை திட்டப் பயன்களை பெற ஆதாரை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள், வேளாண் தயாரிப்பு அமைப்புகளுக்கு மண்டி அமைக்க ரூ.75 லட்சம் வரை அரசு வழங்குகிறது. இதில் வெளிப்படைத்தன்மை, உரியவர்கள் பயன் அடைவதை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆதாரை அளிக்க வேண்டும், ஆதார் இல்லாதோர் அதற்கு நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News April 26, 2025
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை.. பாகிஸ்தான் நிலைப்பாடு?

செப்டம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என அணியின் ஓபனர் குல் ஃபெரோசா கூறியுள்ளார். இதே கருத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் முன்வைத்திருந்தது. மேலும் பஹல்காம் தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், பொதுவான மைதானங்களிலேயே இரு அணிகளும் பங்கேற்கும் வகையிலான ஹைபிரிட் மாடலின் படியே பாக். அணி தொடர்ந்து விளையாடவுள்ளது.
News April 26, 2025
வெளிப்படையான விசாரணைக்கு தயார்: பாக். PM

பஹல்காம் தாக்குதல் குறித்து வெளிப்படையான, நடுநிலையான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அனைத்து வகையிலான தீவிரவாதத்திற்கும் எதிராகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் சிந்து நதிநீரை நிறுத்தினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 26, 2025
பிரபல இயக்குநரும், நடிகருமான நாகேந்திரன் காலமானார்!

பிரபல இயக்குநர் நடிகர் நாகேந்திரன் காலமானார். இவர் சரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். விமல் நடிப்பில் 2015-ல் வெளிவந்த ‘காவல்’ படத்தின் மூலம் நாகேந்திரன் இயக்குநராக அறிமுகமாகினார். இவர் தற்போது மரணமடைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். நாகேந்திரனின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP.