News April 4, 2024

நீலகிரி அதிமுகவின் எஃகு கோட்டை

image

நீலகிரி அதிமுகவின் கோட்டை என்பதை பொதுமக்கள் நிரூபித்து காட்ட வேண்டும் என இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரி வேட்பாளர் லோகேஷை ஆதரித்து பேசிய அவர், ஜெயலலிதா நீலகிரிக்கு அடிக்கடி வந்து சென்ற ஒரே காரணத்திற்காக திமுக இந்த மாவட்டத்தை புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார். மேலும், காற்றில் ஊழல் செய்த ஆ.ராசா தேர்தலுக்கு பிறகு எங்கு இருப்பார் என்று கூற முடியாது என்றும் இபிஎஸ் விமர்சித்தார்.

Similar News

News February 22, 2026

கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்

image

*நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல, நாமே ஏற்படுத்திக் கொள்வது. *முதலில் யார் மீதாவது குற்றம் சாட்ட விரும்பினால், உன் மீதே சாட்டு. *கருணை பொங்கும் உள்ளம், அது கடவுள் வாழும் இல்லம். *உண்மையைச் சொல்பவன் எவனும், உறவை இழக்கிறான். உறவை விரும்புபவன் எவனும், உண்மையை இழக்கிறான். *மனிதனுடைய திறமை பெரிதல்ல, கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.

News February 22, 2026

பாகிஸ்தானில் வறுமை 28.8% ஆக அதிகரிப்பு!

image

பாகிஸ்தான் வறுமை விகிதம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018–19 ஆம் நிதியாண்டில் 21.9% ஆக இருந்த வறுமை விகிதம், 2024–25 ஆண்டில் சுமார் 28.8% ஆக உயர்ந்துள்ளது. வரி அதிகரிப்பு மற்றும் மானியம் குறைப்பு போன்றவை சாமானிய மக்களை பெருமளவில் பாதித்துள்ளது. அதேபோல், கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

News February 22, 2026

வரியை 15% ஆக உயர்த்திய டிரம்ப்

image

டிரம்ப் உலகளாவிய வரிகளை 10-ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமெரிக்க எதிர்ப்பு என்று விமர்சித்த டிரம்ப், பல தசாப்தங்களாக அமெரிக்கா பல நாடுகளால் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், அந்த நாடுகள் மீது வரிகள் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பிப். 20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, 10% வரி என டிரம்ப் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!