News April 23, 2025
’தமிழில் பெயர்ப் பலகை இல்லையென்றால் சிறை’

வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்க மே 15 வரை மட்டுமே அவகாசம். இல்லையென்றால் நிறுவனங்களுக்கு ரூ.2,000 அபராதமும், தொழிற்சாலைகளுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். எனவே அணைத்து கல்வி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள்சங்கங்கள் தமிழ் பெயா் பலகை நூறு சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்து அபராதத்தை தவிா்க்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 23, 2025
வேலூர் காவல் துறை சார்பில் செய்தி குறிப்பு

வேலூர் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உங்கள் பகுதியில் விற்கப்படும் சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து, உங்களின் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல் புகாரளிக்க, Drug Free Tamil Nadu தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்ட செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 23, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல். 23) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News April 23, 2025
வேலூர் அருகே பெண் தற்கொலை

வேலூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (34). இவரது மனைவி ராஜகுமாரி (29). ராஜகுமாரிக்கு கடந்த சில மாதங்களாக தீராத நோயினால் பாதிக்கப்ட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் கடந்த 21-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு கொண்டார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.