News April 23, 2025
காஷ்மீர் தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரின் பகல்ஹாமில் 28 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதலில் பலியான 28 பேருக்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய இபிஎஸ், தீவிரவாத தாக்குதலில் காயமடைந்து ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Similar News
News April 23, 2025
பாக்.-ஐ செதில் செதிலாக தகர்க்கும் இந்தியா?

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானை ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பழிவாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. *பாக். ராணுவம், லஷ்கர் – இ – தொய்பா முகாம்களில் தாக்குதல். *வர்த்தகத்தை முழுமையாக ரத்து செய்வது. *சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. *ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள P5 நாடுகளிடம் பாகிஸ்தான் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவது.
News April 23, 2025
அடுத்தடுத்து 5 விக்கெட்.. SRH கவலைக்கிடம்

MI-க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் SRH அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறி வருகிறது. முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த SRH அடுத்தடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா என நட்சத்திர வீரர்களின் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால், அந்த அணி 8.3 ஓவரில் 35/5 ரன்களுடன் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது.
News April 23, 2025
தீவிரவாதிகளின் தளபதியை சுற்றிவளைத்த ராணுவம்

J&K-வில் எண்கவுண்டர் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. குல்காமில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட TRF தீவிரவாத அமைப்பின் தளபதி ஆஷிஃப் ஃபவுஜி உள்பட அனைத்து தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். ஆஷிஃப் நேரடியாக களத்தில் இறங்கி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.