News April 23, 2025
நீட் மாதிரி நுழைவுத் தேர்வுக்கு இன்றே கடைசி

பிளஸ் 2 முடித்து மருத்துவ கனவில் உள்ள மாணவர்களுக்காக மதுரையில் தனியார் நாளிதழ் – ஸ்டாரெட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஏப்.27 காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 96777 60856 என்ற அலைபேசி எண்ணில் இன்று மாலை (ஏப்.23) 5 மணிக்குள் முன் பதிவு செய்ய வேண்டும்.
Similar News
News November 5, 2025
மதுரையில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா.?

மதுரை மக்களே, நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.
News November 5, 2025
மதுரை: சொல்பேச்சு கேட்காத மகன்கள்; தாய் விபரீத முடிவு

மதுரை ஆனையூர் வாகைகுளத்தை சேர்ந்தவர் விமலா (34). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இவரது இரண்டு மகன்களும் இவரது பேச்சு மற்றும் அறிவுரைகளை கேட்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 5, 2025
மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

மதுரை அழகர்கோவில் மற்றும் அச்சம்பத்து துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொய்கரைப்பட்டி, நாயக்கம்பட்டி, அழகர் கோவில் கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாத்தூர்பட்டி, தேத்தாம்பட்டி மற்றும் மந்திகுளம் பகுதிகளில் இன்று (நவ.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


