News April 23, 2025
மத்திய அமைச்சரவை அவசரமாக கூடுகிறது

சவுதி பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு PM டெல்லி திரும்பிய நிலையில், பகல் 12 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடுகிறது. PM இல்லத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். பயங்கரவாதத்தை அடியோடு ஒடுக்குவது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 23, 2025
முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை: பதில் தாக்குதல்?

பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் முப்படைத் தளபதிகள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், ஸ்ரீநகரில் இருந்து திரும்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டுள்ளனர். பதிலடி தாக்குதல் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
News April 23, 2025
IPL: SRH முதலில் பேட்டிங்

ஹைதராபாத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில், SRH – MI அணிகள் மோதவுள்ளன. இதில், டாஸ் வென்ற MI அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, SRH அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்துள்ளார். இந்த இரு அணிகளுக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் MI அணி வெற்றி பெற்றது. இதனை பழி வாங்கும் நோக்கில் SRH ஆக்ரோஷமாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News April 23, 2025
இவனே வீரன்.. அதனால்தான் வீரமரணம் கிடைத்ததோ!

பஹல்காம் தாக்குதலின் போது, அப்பகுதியில் குதிரை சவாரி தொழில் செய்யும் சையது அடில் ஹூசைன் ஷா என்பவர் செய்த செயல் கண்கலங்க வைத்துள்ளது. அப்பாவி மக்கள் சுடப்படுவதை கண்டதும் உடனே அவர், தீவிரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். இருப்பினும் சுதாரித்துக் கொண்ட தீவிரவாதி, அவரை சுட்டு கொன்றுள்ளான். தனது உயிரை துச்சமாக நினைத்து, மக்களை காப்பாற்ற முயன்றுள்ளார் அந்த வீரன்.