News April 23, 2025
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி முன்னாள் துவக்க ஆட்டக்காரர் Keith Stackpole (84) காலமானார். 1966- 1974 வரை ஆஸ்திரேலிய அணிக்காக அவர் விளையாடியுள்ளார். மொத்தம் 7 சதங்கள் உள்பட 2,807 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக நியூசி.க்கு எதிராக 1974-ம் ஆண்டில் டெஸ்டில் விளையாடினார். பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், டிவி கமெண்டேட்டராகவும், பத்திரிகையில் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
Similar News
News April 23, 2025
இவனே வீரன்.. அதனால்தான் வீரமரணம் கிடைத்ததோ!

பஹல்காம் தாக்குதலின் போது, அப்பகுதியில் குதிரை சவாரி தொழில் செய்யும் சையது அடில் ஹூசைன் ஷா என்பவர் செய்த செயல் கண்கலங்க வைத்துள்ளது. அப்பாவி மக்கள் சுடப்படுவதை கண்டதும் உடனே அவர், தீவிரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். இருப்பினும் சுதாரித்துக் கொண்ட தீவிரவாதி, அவரை சுட்டு கொன்றுள்ளான். தனது உயிரை துச்சமாக நினைத்து, மக்களை காப்பாற்ற முயன்றுள்ளார் அந்த வீரன்.
News April 23, 2025
தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.
News April 23, 2025
பிரபல நடிகர் ‘பாசு டா’ காலமானார்

பிரபல அசாமிய நடிகர் மற்றும் பாடகர் ஃப்விலா பஸுமாட்டரி (54) காலமானார். இவரது மறைவு அசாம் மற்றும் வடகிழக்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் என போற்றப்படும் இவர், அம்மக்களால் ‘பாசு டா’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். மேலும், போடோ மொழியில் எண்ணற்ற பாடல்களையும் இவர் பாடியுள்ளார். இவரின் மறைவுக்கு திரைக் கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.