News April 23, 2025

லாக்-இன் பண்ணாமல் இனி வரித்தாக்கல் செய்யலாம்

image

பயனர் ஐடி, கடவுச்சொல் இல்லாமல் இனி எளிதாக வரித்தாக்கல் செய்யலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது. இதன்படி, அதிகாரப்பூர்வ e-filing இணையதளத்தில் உள்ள ‘e-Pay Tax’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, பான் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் உள்ளிட்டு வரித்தாக்கல் செய்யலாம் எனவும், இதனால் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை என CBDT விளக்கம் அளித்துள்ளது.

Similar News

News March 18, 2026

BREAKING: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இன்று காலை 1 அவுன்ஸ் $9 உயர்ந்த நிலையில், மாலையில் $150 குறைந்து $4,851-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியும் $2.97 குறைந்து $76.95-க்கு விற்பனையாகிறது. இதன் எதிரொலியால், நாளை இந்திய சந்தையில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத சரிவைச் சந்திக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

News March 18, 2026

தாக்கப் போகிறோம்… சொல்லி அடிக்கும் ஈரான்

image

அடுத்த சில மணி நேரங்களில் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்கள் & சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. UAE, சவுதி அரேபியா & கத்தாரில் உள்ள ஆலைகளின் செயற்கைகோள் படங்களையும் வெளியிட்டுள்ள ஈரான் ராணுவம் அந்த ஆலைகளுக்கு அருகிலுள்ள தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

News March 18, 2026

பணமழை கொட்டும் 4 ராசிகள்.. ராஜயோகம்

image

திருக்கணித & வாக்கிய பஞ்சாங்கங்களின்படி ஜூன் 2-ல் குரு பகவான், கடக ராசிக்குள் பிரவேசிக்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், கடகம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு, லாபம் இரட்டிப்பாகும். பூர்வீக சொத்துக்களின் வாயிலாக ஆதாயம் ஏற்படும். பழைய கடன்களிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் திறக்கும். SHARE

error: Content is protected !!