News April 23, 2025
ஸ்ரீநகரில் இருந்து திரும்ப கூடுதல் விமானங்கள்!

காஷ்மீரில் அசாதாரணமான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஸ்ரீநகரில் இருந்து 4 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன. இதில் 2 மும்பைக்கும், 2 டெல்லிக்கும் இயக்கப்படுகிறது. விமான டிக்கெட் விலை உயர்த்தப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையை பொறுத்து விமான சேவை அதிகரிக்கப்படும் என அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
Similar News
News April 28, 2025
இப்படி தர்பூசணியை சாப்பிட்டால் பிரச்னைதான்!

சம்மர் சீசனில் பலரும் விரும்பும் பழமாக இருக்கிறது தர்பூசணி. ஆனால், அதைச் சாப்பிடும்போது நிச்சயம் கவனம் வேண்டும். இல்லையேல், அது ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிட்டால் வாயு ஏற்படலாம். அதே போல, அதிக அளவில் தர்பூசணியை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். மேலும், பித்தம், வயிற்று பிரச்னை போன்றவை உண்டாக வாய்ப்பிருக்கிறதாம்.
News April 28, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் & கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, நாகை & நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
News April 28, 2025
பங்குச்சந்தை கிடுகிடுவென உயர்வு

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் கணிசமான உயர்வை கண்டுள்ளன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 289 புள்ளிகள் உயர்ந்து, 24,328 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,005 புள்ளிகள் உயர்ந்து, 80,218 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. எண்ணெய் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் & பொதுத்துறை வங்கிகள் இன்று உயர்வு கண்டுள்ளன. உங்களின் லாபம் அதிகரித்திருக்கிறதா?