News April 23, 2025

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை

image

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு எண் இல்லாத பைக் தாக்குதல் நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

Similar News

News October 19, 2025

பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேறியது இவர்தான்!

image

பிக்பாஸ் தமிழ் இந்த வார எவிக்‌ஷனில், போட்டியாளர் அப்சரா சிஜே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். 2-வது வார நாமினேஷனில் FJ, அரோரா, விஜே பாரு, சபரிநாதன், திவாகர், கெமி, அப்சரா CJ இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் குறைவான வாக்குகளை பெற்றதால் அப்சரா சிஜே எவிக்ட் செய்யப்பட்டார். போட்டியாளர்கள் எண்ணிக்கை 17-ஆக குறைந்துள்ள நிலையில், விரைவில் சிலர் வைல்ட்கார்டு என்ட்ரி கொடுக்கவுள்ளனர்.

News October 19, 2025

கேப்டனாக கில் படைத்த மோசமான சாதனை

image

3 வடிவிலான கிரிக்கெட்டிலும் சுப்மன் கில் கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியே தழுவியுள்ளது. 2024-ம் ஆண்டு டி20-ல் ஜிம்பாப்வே, டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் ODI-ல் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இந்தியா தோற்றதால் கேப்டன்ஸியில் மோசமான சாதனைக்கு கில் சொந்தக்காரர் ஆகியுள்ளார். இப்பட்டியலில் ஏற்கெனவே விராட் கோலி, ஷான் பொல்லாக், தில்ஷன், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட வீரர்களும் அடங்குவர்.

News October 19, 2025

பண மழை கொட்டும் 5 ராசிகள்

image

குரு பகவன் அதிசார நிலையில், நேற்று (அக்.18) கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். இதனால், 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *மிதுனம்: நிதி ஆதாயம் பெருகும். *சிம்மம்: வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். *கன்னி: தொழிலில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். தொட்டதெல்லாம் வெற்றியடையலாம். *துலாம்: வேலையில் சம்பள உயர்வு, வியாபாரத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். *விருச்சிகம்: நிதி நிலைமை வலுவாக இருக்கும்.

error: Content is protected !!