News April 23, 2025
நாமக்கல்: :அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE!
Similar News
News July 7, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 7) நாமக்கல் – வெங்கடாச்சலம் ( 9445492164), ராசிபுரம் – கோமளவல்லி ( 8610270472), திருச்செங்கோடு – தீபா ( 9443656999), வேலூர் – கெங்காதரன் ( 6380673283) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .
News July 7, 2025
நாமக்கல் அருகே 2 கார்கள் மோதி விபத்து!

நாமக்கல்: குமாரமங்கலம் அருகே, இராசிபுரம் மற்றும் நாமக்கல் பிரிவு ரோடு, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் இன்று மாலை 4 மணியளவில், 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கு தலை மற்றும் கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த கரட்டுப்பாளையம் போலீசார், அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News July 7, 2025
10th தேர்ச்சி பெற்றால் உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 68 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974687>>தொடர்ச்சி<<>> (1\2)