News April 23, 2025
முட்டை விலை குறைந்தது

நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நிர்ணயம் செய்யும் விலையின் அடிப்படையிலேயே அன்றாடம் தமிழகம் முழுவதும் முட்டை விலை முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல்லில் 1 முட்டையின் விலை ரூ.4.05ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட இடங்களில் சில்லரை கடைகளில் 1 முட்டை ரூ.4.40-ரூ.4.50 வரை விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் முட்டை விலை என்ன? கீழே கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News January 5, 2026
BREAKING: பொங்கல் பணம் ₹3000 இவர்களுக்கு கிடையாது

பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புடன் ₹3000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், யார் யாருக்கு ரொக்கப்பணம் கிடைக்காது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்க்கரை அட்டைதாரர்கள் ( White Card) மற்றும் NO Commodity Card (NC Card) அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் கிடைக்காது. மற்ற அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பணம் வழங்கப்படும்.
News January 5, 2026
மோடி பொங்கல், ஓடிப் போங்கள்: சீமான்

தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என சீமான் விமர்சித்துள்ளார். சிவகங்கையில் நடந்த நாதக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், எந்தப் பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக் கூடாது என பாஜக நினைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பாஜகவினர் மோடி பொங்கல் என்று கூறினால், ஓடிப் போங்கள் என்று பதிலுக்கு கூற வேண்டியதுதான் என கிண்டலடித்தார்.
News January 5, 2026
அமெரிக்காவை பொறுத்துக் கொள்ள முடியாது: வட கொரியா

வெனிசுலா அதிபர் மதுரோவை <<18762100>>அமெரிக்க ராணுவம் <<>>கைது செய்தது, இறையாண்மை மீதான கடுமையான அத்துமீறல் என வடகொரிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இச்செயல் உலக அமைதியை கடுமையாக பாதிக்கும் என்றும், அமெரிக்காவின் ஆதிக்கப்போக்கை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் எச்சரித்துள்ளது. அத்துடன் கிழக்கு கடலில் உள்ள அமெரிக்க ராணுவத்தை நோக்கி ஏவுகணைகளை ஏவியும் வடகொரியா தனது எதிர்ப்பை காட்டமாக தெரிவித்துள்ளது.


