News April 23, 2025
கோவை: அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
Similar News
News November 3, 2025
BREAKING: கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

கோவை விமான நிலையத்தில் பின்புறம் நேற்றிரவு ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, 3 இளைஞர்கள் அந்த ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில் மாணவியை மீட்ட பீளமேடு போலீசார், தப்பியோடிய 3 இளைஞர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
News November 3, 2025
கோவை: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspcbedvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0422-2449550 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
கோவையில் கணவனுக்கு நேர்ந்த சோகம்.. மனைவி கைது!

கோவை வீர கேரளத்தை சேர்ந்த நிஷாந்த் குமார், காந்திபுரம் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரதிக்ஷா என்ற மனைவி உள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நிஷாந்த்குமாரிடம் பேச வேண்டும் என கூறி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இருவர் அவரை ஜிபி சிக்னல் அருகே வர வைத்து தாக்கியுள்ளனர். இப்பபுகாரின் பேரில் காட்டூர் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.


