News April 23, 2025
சிவகங்கை: அங்கன்வாடியில் வேலை.. இன்றே கடைசி

சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 4 பணியாளர், 29 உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க*
Similar News
News April 23, 2025
தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம்

சிங்கம்புணரி அரசு பள்ளி மாணவி வீட்டு பாடம் செய்யாமல் வந்ததால், ஆசிரியை, 400 தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். இதனால், மாணவியின் உடல்நலம் பாதித்ததாக, மாணவியின் தாயார், மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். 2017ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய குழு, மனுதாரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும், அதை ஆசிரியையிடம் இருந்து வசூல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
News April 22, 2025
கட்டுரை, பேச்சு போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் செம்மொழிநாள் விழாவினை முன்னிட்டு, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு 09.05.2025 அன்றும், கல்லூரி மாணாக்கர்களுக்கு 10.05.2025 அன்றும் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
News April 22, 2025
சிவகங்கை: SI தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) பொதுத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 25.04.2025 முதல் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. மேலும், இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 04575-240435 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.