News April 23, 2025
துரைமுருகன் விடுவிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உள்பட அவரது குடும்பத்தினரை விடுவித்து 2007-ம் ஆண்டு வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
Similar News
News August 12, 2025
மகாராஷ்டிராவில் கோர விபத்து: 8 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் ஹெத் மலைப்பகுதியில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் என்ற சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலை தரிசனம் செய்வதற்காக 40 பக்தர்களுடன் வந்த மினி சரக்கு லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பெண்கள் உயிரிழந்த நிலையில், 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ₹4 லட்சம் நிவாரணம் அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 425 ▶குறள்: உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. ▶ பொருள்: உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
News August 12, 2025
நெடுஞ்சாலையை தனியாருக்கு விட அன்புமணி எதிர்ப்பு

வண்டலூர் – மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், 60 KM நீளமுள்ள இச்சாலையை ஏலம் எடுக்கும் நிறுவனம் 25 வருடங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கும் உரிமம் பெறுமென குறிப்பிட்டுள்ளார். மக்களின் வரிப்பணத்தில் கட்டிய சாலையை தனியாரிடம் ஒப்படைப்பது நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.