News April 23, 2025
ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: பலி 28ஆக உயர்வு

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. பகல்ஹாமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மேலும் கடற்படை அதிகாரி ஒருவரும், உளவுத்துறை அதிகாரி ஒருவரும் பலியாகினர். 3 தமிழர்கள் உள்பட சுமார் 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பொறுப்பேற்றுள்ளது.
Similar News
News April 23, 2025
பாக். வான்வெளியை தவிர்த்த பிரதமர்

பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு நேற்று பயணம் மேற்கொண்டபோது, பாக். வான்வெளியை பயன்படுத்தி ஓமன் வழியாக சென்றார். ஆனால், காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் நடந்த பின்னர் இன்று அவசர அவசரமாக நாடு திரும்பினார். அப்போது, பாக். வான்வெளியை தவிர்த்துவிட்டு, ஓமன் – குஜராத் வழியாக டெல்லி வந்தடைந்தார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பயண வழித்தடத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
News April 23, 2025
தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை: ராஜ்பவன் விளக்கம்

துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை என ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புடன் ஒப்பீட்டு துணை வேந்தர்கள் மாநாட்டை அதிகார மோதல் என சொல்வது தவறு எனவும் கவர்னர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. மாநாட்டுப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகவும், சில ஊடங்கள் இருவருக்கும் மோதல் என தவறான தகவலை கூறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 23, 2025
அட்சய திருதியை.. வெளியான ஷாக் நியூஸ்!

தங்கம் விலை சவரனுக்கு ₹72,120க்கு விற்பனை செய்யப்படுவதால் சாமானியர்களை மட்டுமின்றி, நகைக்கடை வணிகர்களையும் குமுறச் செய்துள்ளது. ஏப்.30 அட்சய திருதியை வரும் நிலையில், அன்று தங்கம் வாங்குவதற்கு முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். விலை குறைந்த பிறகு நகை வாங்கலாம் என பலர் நினைப்பதாகவும், சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே நகை வாங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.