News April 23, 2025

4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

image

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஏப்.23) காலை 10 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், வருகிற 28-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 23, 2025

ராஃபாவுக்காக திறந்த வாய்.. இப்போ என்ன ஆச்சு?

image

பஹல்காமில் நடத்த தாக்குதல் குறித்து பாலிவுட் பிரபலங்கள் யாரும் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என நெட்டீசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இஸ்ரேல் தாக்குதலால் காசாவின் ராஃபாவில் பலர் உயிரிழந்த போது ‘ALL EYES ON RAFAH’ என்பதை பாலிவுட் பிரபலங்கள் டிரெண்டாக்கினர். ஆனால் இப்போது 28 இந்தியர்கள் கொல்லப்பட்ட நிலையில் பாலிவுட் நட்சத்திரங்கள் மவுனமாக உள்ளனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News April 23, 2025

இருட்டுக்கடை உரிமையாளர் மகள் மீண்டும் பரபரப்பு புகார்

image

தனது கணவர் பல்ராம் சிங் வெளிநாட்டுக்கு தப்ப வாய்ப்புள்ளதால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என இருட்டுக்கடை உரிமையாளர் மகள் கனிஷ்கா நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளார். வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமத்தைக் கேட்பதாக ஏற்கனவே அளித்த புகார் மீதான விசாரணைக்கு ஆஜராக, பல்ராம் சிங் 10 நாள்கள் அவகாசம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 23, 2025

பயங்கரவாதம்: யார் இந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்?

image

<<16186680>>பஹல்காம் <<>>தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள The Resistance Front (TRF), லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு என நம்பப்படுகிறது. J&K-ன் சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு 2019-ல் துவங்கப்பட்ட TRF, 2023-ல் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரை சுதந்திர பிரதேசமாக அறிவிப்பதை முன்னிறுத்தும் TRF, இதுவரை காஷ்மீர் இந்துக்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

error: Content is protected !!