News April 23, 2025

வீட்டின் தடுப்பு சுவரில் கார் மோதியதில் டிரைவர் பலி

image

இராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(47). இராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது தங்கச்சிமடம் அருகே நேற்று அதிகாலை தூக்க கலக்கத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். காயமடைந்த இருவரை மீட்ட போலீசார் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Similar News

News December 2, 2025

முதுகுளத்தூர் அருகே பேருந்து விபத்து

image

முதுகுளத்தூர் அருகேயுள்ள காக்கூர் கிராமத்தில் உள்ள சாலைகள் இரு புறங்களிலும் செடிகள் வளர்ந்து குறுகலாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது. இந்நிலையில் சில நாட்களாக இந்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்த காரணமாக சாலை ஓரங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மண்ணரிப்பு காரணமாக மினிபேருந்து சிக்கிக் கொண்டது. இந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

News December 2, 2025

ராமநாதபுரம்: 10th, 12th தகுதி.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். கடைசி தேதி; டிச. 4, 2025 ஆகும். எல்லோருக்குமான நல்ல வேலைவாய்ப்பு. உடனே SHARE பண்ணுங்க.

News December 2, 2025

 ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ.10.92 லட்சம் மோசடி

image

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சமூக வலைதளத்தில் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என சிலர் ஆசை காட்டியுள்ளனர். அதை நம்பி ரூ.11 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். எந்த லாபமும் வராமல் மேற்கொண்டு பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த வாலிபர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வாலிபர் அனுப்பிய கணக்கில் இருந்து ரூ.10.92 லட்சத்தை மீட்டு ஒப்படைத்தனர்.

error: Content is protected !!