News April 23, 2025
அரசு பேருந்து ஓட்டுனருக்கு 6 மாதம் சிறை

தூத்துக்குடி கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் மோகன். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் மீது அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அரசு பேருந்து ஓட்டுனரான முடிவைத்தானேந்தலை சேர்ந்த முருகனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Similar News
News December 9, 2025
தூத்துக்குடியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தூத்துக்குடி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0461-2335111
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 9, 2025
தூத்துக்குடி: புதிய வாக்காளர்கள் கவனத்திற்கு…

புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று (டிச.9, செவ்வாய்) முதல் விண்ணப்பிக்கலாம்.18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தேவையான ஆவணங்கள்: 1.ஆதார் கார்டு, 2.போட்டோ 1, 3.பிறப்புச்சான்றிதழ், 4.பள்ளிச் சான்றிதழ் (TC), இன்று அருகில் உள்ள மையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
News December 9, 2025
தூத்துக்குடி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா?

தூத்துக்குடி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை. இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.


