News April 23, 2025
அப்பளம் அதிகம் சாப்பிட்டால் ஆபத்து!

வீட்டின் மாடியில் அரிசி வத்தல், ஜவ்வரிசி வத்தல் காயப்போடுவது வழக்கொழிந்துவிட்டது. அதற்கு மாற்றாக ரெடிமேட் அப்பளங்களே இப்போது வீட்டில் அதிகம் பொரிக்கப்படுகின்றன. இதனை அதிகம் உணவில் சேர்ப்பது ஆபத்து என்கின்றனர் டாக்டர்கள். காரணம் இதில் இருக்கும் சோடியம் பென்சோயேட். இது உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் வருவதற்கு வழிவகுக்குமாம். சோ, ரெடிமேட் அப்பளங்களை அளவாக பயன்படுத்துங்கள்.
Similar News
News October 15, 2025
உங்கள் குழந்தைகள் அதிபுத்திசாலி ஆகணுமா?

உங்கள் குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகரிக்க அவர்களுக்கு கல்வி மட்டும் போதாது. கூடவே சில பழக்க வழக்கங்களை அவர்களுக்குள் விதைப்பது அவசியம். ➤பாட புத்தகங்களை தாண்டி, கதை புத்தகங்களை வாசிப்பதை ஊக்குவியுங்கள் ➤செஸ், Puzzle, விடுகதை போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள் ➤Sports மிக மிக அவசியம் ➤தூங்கும் முன், தூங்கி எழுந்ததும் போன் பார்க்க அனுமதிக்க வேண்டாம். அனைத்து பெற்றோர்களுக்கும் இத SHARE பண்ணுங்க.
News October 15, 2025
வெளிநாடு செல்ல கட்டுப்பாடு இல்லை: கார்த்தி சிதம்பரம் Happy

INX மீடியா வழக்கில் காங்., MP கார்த்திக் சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல விதித்திருந்த கட்டுப்பாட்டை டெல்லி உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. INX மீடியா வழக்கில் ஜாமின் பெற்றிருந்தாலும், ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்ல அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த விதியை தளர்த்த கோரி கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிபதி ரவீந்தர் துடேஜா கட்டுப்பாட்டை தளர்த்தி உத்தரவிட்டார்.
News October 15, 2025
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிப்பு

இந்தியா, ஆஸி., இடையேயான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டி, கடந்த அக்.12-ல் நடைபெற்றது. இதில், 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸி., வெற்றி பெற்றது. இப்போட்டியில் slow over-rate காரணமாக (பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக) இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கி., நியூசி., வங்கதேசம் அணிகளுடன் மோதவுள்ள இந்தியா, 2-ல் நிச்சயம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.