News April 23, 2025
நட்பு நாடான இந்தியாவுக்கு ஆதரவு: அமெரிக்கா

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கர தாக்குதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பேட்டியளித்தபோது, இந்த சம்பவம் தொடர்பாக இந்திய PM மோடியுடன் அதிபர் ட்ரம்ப் பேசவிருப்பதாக தெரிவித்தார். நட்பு நாடான இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள்தான் உலக அமைதிக்காக போராட வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News April 23, 2025
மத்திய அமைச்சரவை அவசரமாக கூடுகிறது

சவுதி பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு PM டெல்லி திரும்பிய நிலையில், பகல் 12 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடுகிறது. PM இல்லத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். பயங்கரவாதத்தை அடியோடு ஒடுக்குவது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 23, 2025
காஷ்மீரில் கொல்லப்பட்ட 28 பேருக்கு CM ஸ்டாலின் இரங்கல்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 28 பேருக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் CM ஸ்டாலின் இரங்கல் குறிப்பை வாசித்தார். அப்போது அவர், இந்த பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது, பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார். பின்னர் சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
News April 23, 2025
டாஸ்மாக் விவகாரம்: TN அரசின் மனு தள்ளுபடி

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை என்று சென்னை HC உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக்காேரி, TN அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் மனு தாக்கல் செய்தன. இதன்மீது HC உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது அந்த மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், அமலாக்கத் துறை தனது சோதனையை தொடரலாம் எனவும் HC தெரிவித்தது.