News April 23, 2025

பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசை வலியுறுத்திய TTV

image

ஜம்மு – காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அவர், பஹல்காம் தாக்குதல் வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News January 11, 2026

இனி தங்கம் கிடைப்பது ஈசி!

image

விலை அதிகரிப்பதால் Gold-ல் இனி Marie Gold மட்டும்தான் வாங்க முடியும் என சோர்ந்தவர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ். பயன்படுத்தப்பட்ட செல்போன், சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்ட E-waste-ல் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் முறையை சீனா கண்டுபிடித்துள்ளது. இந்த டெக்னாலஜி மூலம், பெரும் சவாலாக இருக்கும் E-waste-ஐ குறைப்பது மட்டுமின்றி, தங்கம் எடுக்க செலவாகும் தொகையும் குறையும் என கணிக்கின்றனர்.

News January 11, 2026

திருப்பரங்குன்றத்தில் PM மோடி தரிசனமா?

image

மதுரையில் ஜன.23-ல் நடைபெறவுள்ள NDA கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் PM மோடி பங்கேற்கிறார். இதனையொட்டி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மோடி தரிசனம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தி.குன்றம் வழக்கு திமுக – பாஜக இடையேயான நேரடி அரசியல் மோதலாக பார்க்கப்படும் நிலையில், மோடியின் பயணத் திட்டம் கவனம் ஈர்க்கிறது. இதன் தாக்கம் 2026 தேர்தலில் எதிரொலிக்குமா?

News January 11, 2026

சற்றுமுன்: கே.எஸ்.அழகிரியின் மனைவி காலமானார்

image

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா காலமானார். உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணி அளவில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.#RIP

error: Content is protected !!