News April 23, 2025

IPL: கே.எல். ராகுல் படைத்த தரமான சாதனை..!

image

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற டேவிட் வார்னரின் சாதனை டெல்லி வீரர் கே.எல். ராகுல் தவிடுபொடியாக்கியுள்ளார். 130 இன்னிங்சில் விளையாடிய அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, டேவிட் வார்னர் (135), விராட் கோலி (157), ஏபி டிவில்லியர்ஸ் (161), ஷிகர் தவான் (168) ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்த சாதனையை யார் முறியடிப்பார் என நினைக்கிறீர்கள்?

Similar News

News November 5, 2025

ஒவ்வொரு மாதமும் ₹5000 கிடைக்கும் திட்டம்

image

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ₹5000 நிதி, ₹2 லட்சம் மதிப்பிலான காப்பீடு ஆகியவற்றை இ-ஷ்ரம் திட்டம் வழங்குகிறது. நிரந்தர வேலை, ஓய்வூதிய வசதி இல்லாதவர்களுக்கு இத்திட்டம் பெரிய உதவியாக இருக்கும். இதனை பெற 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கணும். இந்த கார்டை பெற <>eshram.gov.in<<>> -ல் விண்ணப்பியுங்கள். SHARE.

News November 5, 2025

ஜென் Z இளைஞர்களுக்கு…. ராகுல் சொன்ன விஷயம்

image

ஹரியானாவில் வாக்குத் திருட்டு மூலம் காங்கிரஸின் வெற்றியை பாஜக பறித்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது ஒரு சதி என்ற அவர், இளைஞர்களும் ஜென் Z தலைமுறையினரும் இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இது உங்களின் எதிர்காலம் பற்றியது. நாட்டின் ஜனநாயக நடைமுறையையும் தேர்தல் கமிஷனையும் 100% ஆதாரங்களுடன் கேள்வி கேட்கிறேன் என்றார்.

News November 5, 2025

வியக்க வைக்கும் இந்த உண்மை தெரியுமா?

image

சில விஷயங்களை யாராவது நமக்கு சொல்லும்போது தான், உண்மையாவா என ஆச்சரியத்துடன் கேட்போம். அப்படி ஆச்சரியங்கள் நிறைந்த சில தகவல்களை உங்களுக்காக மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பார்க்கவும். இந்த அரிய தகவல்களை மற்றவர்களுக்கும் SHARE செய்யலாமே.

error: Content is protected !!