News April 23, 2025
விருதுகளை விட இதுதான் முக்கியம்: சாய் பல்லவி

குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சாய் பல்லவி. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், விருதுகள் கிடைப்பதை விட ரசிகர்களின் அன்பை பெறுவதற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். திரையரங்கில் தனது கதாபாத்திரங்களை கண்டு அந்த எமோஷனுடன் ரசிகர்கள் தங்களை இணைத்துக் கொள்வதையே உண்மையான வெற்றியாக பார்க்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 23, 2025
துரைமுருகன் விடுவிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உள்பட அவரது குடும்பத்தினரை விடுவித்து 2007-ம் ஆண்டு வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
News April 23, 2025
ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: பலி 28ஆக உயர்வு

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. பகல்ஹாமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மேலும் கடற்படை அதிகாரி ஒருவரும், உளவுத்துறை அதிகாரி ஒருவரும் பலியாகினர். 3 தமிழர்கள் உள்பட சுமார் 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பொறுப்பேற்றுள்ளது.
News April 23, 2025
ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

மகாராஷ்டிரா தேர்தல் விவகாரத்தில் ராகுல் காந்தி ஆதாரமற்ற <<16168585>>குற்றச்சாட்டுகளை<<>> முன்வைத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரின் இந்த தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதுடன், அரசியல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.