News April 23, 2025

10 பேருக்கு தலா ₹70,000.. துபேவின் தாராள மனசு!

image

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் 10 தடகள வீரர்களுக்கு தலா ₹70,000 வழங்குவேன் என ஷிவம் துபே உறுதியளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் வருடாந்தர விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், இந்த சிறிய உதவித்தொகை, தடகள வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் எனவும், தேசத்திற்கு பெருமை சேர்ப்பவர்களுக்கு கூடுதல் உந்துதலை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 23, 2025

துரைமுருகன் விடுவிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

image

1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உள்பட அவரது குடும்பத்தினரை விடுவித்து 2007-ம் ஆண்டு வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

News April 23, 2025

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: பலி 28ஆக உயர்வு

image

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. பகல்ஹாமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மேலும் கடற்படை அதிகாரி ஒருவரும், உளவுத்துறை அதிகாரி ஒருவரும் பலியாகினர். 3 தமிழர்கள் உள்பட சுமார் 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பொறுப்பேற்றுள்ளது.

News April 23, 2025

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

image

மகாராஷ்டிரா தேர்தல் விவகாரத்தில் ராகுல் காந்தி ஆதாரமற்ற <<16168585>>குற்றச்சாட்டுகளை<<>> முன்வைத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரின் இந்த தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதுடன், அரசியல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

error: Content is protected !!