News April 23, 2025
BREAKING: சவுதி பயணத்தை ரத்து செய்தார் PM மோடி

PM மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்து செய்துள்ளார். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளார். இன்று (ஏப். 23) அதிகாலை 5 மணிக்கு மோடி டெல்லிக்கு வரவுள்ளார். தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 6, 2025
சற்றுமுன்: யூடியூப் பிரபலம் காலமானார்

தனது வீடியோக்களால் மக்கள் மனதில் பயணம் செய்யும் ஆர்வத்தை தூண்டிவந்த பிரபல யூடியூபர் அனுனய் சூட் (32 வயது) அகால மரணமடைந்தார். அமெரிக்காவில் வீடியோ ஷூட் முடித்துவிட்டு வந்து படுக்கையில் விழுந்தவர் காலையில் எழுந்திருக்கவேயில்லை. இவரது மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. இன்ஸ்டாவில் 14 லட்சம், யூடியூபில் லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் வைத்துள்ள இவரின் மறைவு பயண ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. RIP
News November 6, 2025
புது வரலாறு படைத்த ஷீத்தல் எனும் சிங்க பெண்

2 கைகள் இல்லாமல் வில்வித்தையில் பல சாதனைகளை ஷீத்தல் தேவி தொடர்ந்து படைத்து வருகிறார். சமீபத்தில் சீனாவில் நடந்த உலக பாரா வில்வித்தை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். தற்போது மீண்டும் ஒரு வரலாற்றை படைத்துள்ளார். ஆசிய கோப்பைக்கான இந்திய ஜூனியர் அணியில் அவர் தேர்வாகியுள்ளார். மாற்றுத்திறனாளி ஒருவர் பொது அணிக்கு தேர்வு செய்யப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை.
News November 6, 2025
ரோடு ஷோவை தடை செய்ய வேண்டும்: திருமாவளவன்

அரசியல் கட்சிகளிடையே சமமற்ற நிலையை ஏற்படுத்தும் ரோடு ஷோவை தடை செய்ய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பணம் உள்ள கட்சிகள் ரோடு ஷோ நடத்தித் தமக்கு செல்வாக்கு இருப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இது வாக்காளர்களிடம் தாக்கத்தை உண்டாக்குகிறதாகவும் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


