News April 23, 2025

மத்திய அரசு வெற்றுக் கூச்சலிட வேண்டாம்: ராகுல்

image

J&K-வில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என ராகுல் காந்தி கண்டித்துள்ளார். அங்கு நிலைமை சீராக இருப்பதாக வெற்று கூச்சலிடாமல், மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும், வருங்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சாமனியர்களின் உயிர் இப்படி பறிபோவதை தடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News April 23, 2025

இதற்குதான் பாஜகவோடு கூட்டணி.. இபிஎஸ் புது பிளான்!

image

பாஜகவுடனான கூட்டணிக்கு பிறகு முதல்முறையாக அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் (ஏப்.25) இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என விளக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். இது திமுகவை வீழ்த்துவதற்கான கூட்டணி மட்டுமே, பாஜகவின் கொள்கைகளை அதிமுக ஒருபோதும் ஏற்காது என சிறுபான்மையினரை சந்தித்து விளக்க வேண்டுமென நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

News April 23, 2025

26-ம் தேதி போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிசடங்கு

image

போப் பிரான்சிஸ் உடலுக்கு வருகிற 26ம் தேதி காலை 10 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 2 நாட்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து அவரின் உடல் வாடிகனில் உள்ள தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

News April 23, 2025

வெளிநாட்டு பயணம் ரத்து.. நாடு திரும்பும் நிர்மலா சீதாராமன்

image

பஹல்காம் தாக்குதலை அடுத்து தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக நாடு திரும்ப உள்ளார். இந்த கடினமான மற்றும் துயரமான நேரத்தில் நம் மக்களுடன் இருக்க, அவர் இந்தியாவுக்குத் திரும்ப உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 20-ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட அவர் 5 நாள்கள் அமெரிக்கா மற்றும் பெரு பயணத்தை திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!