News April 23, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Similar News

News April 23, 2025

அரசு பேருந்து ஓட்டுனருக்கு 6 மாதம் சிறை

image

தூத்துக்குடி கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் மோகன். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் மீது அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அரசு பேருந்து ஓட்டுனரான முடிவைத்தானேந்தலை சேர்ந்த முருகனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News April 23, 2025

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு பயிற்சி – இளம்பகவத்

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 1299 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுத தயாராகும் தூத்துக்குடி மாவட்ட போட்டித் தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தொடங்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

image

தூத்துக்குடியில் மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24ஆம் தேதி தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!