News April 23, 2025
நள்ளிரவு வரை மழை கொட்டப் போகுது..!

தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 23, 2025
வீட்டு மின்நுகர்வோரின் நிலைக்கட்டணம் ரத்து: அரசு

வீட்டு மின்நுகர்வோரின் நிலைக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மின்கட்டண திருத்தத்தில் இருந்து நுகர்வோர்களுக்கு பல்வேறு சலுகைகள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார். திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது போல, நிலைக்கட்டணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News April 23, 2025
இதற்குதான் பாஜகவோடு கூட்டணி.. இபிஎஸ் புது பிளான்!

பாஜகவுடனான கூட்டணிக்கு பிறகு முதல்முறையாக அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் (ஏப்.25) இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என விளக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். இது திமுகவை வீழ்த்துவதற்கான கூட்டணி மட்டுமே, பாஜகவின் கொள்கைகளை அதிமுக ஒருபோதும் ஏற்காது என சிறுபான்மையினரை சந்தித்து விளக்க வேண்டுமென நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
News April 23, 2025
26-ம் தேதி போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிசடங்கு

போப் பிரான்சிஸ் உடலுக்கு வருகிற 26ம் தேதி காலை 10 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 2 நாட்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து அவரின் உடல் வாடிகனில் உள்ள தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.