News April 23, 2025
விஜய் கடும் கண்டனம்

ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்டிருக்கும் தீவிரவாத தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அங்கு அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் அவர் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் விஜய் பதிவு செய்துள்ளார்.
Similar News
News October 18, 2025
234 தொகுதிகளுக்கும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

234 தொகுதிகளுக்கும் புதிய பொறுப்பாளர்களை நியமித்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். அதன்படி, விளவங்கோடு தொகுதியின் பொறுப்பாளராக விஜயதரணி, ஆயிரம்விளக்கு தொகுதியின் அமைப்பாளராக நடிகை குஷ்பு, சிங்காநல்லூர் தொகுதிக்கு AP முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் 234 தொகுதிகளையும் வலுப்படுத்தும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
News October 18, 2025
BREAKING: அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. தமிழக அரசு திட்டம்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கியமான கட்டுப்பாடு விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 2 முறை மட்டுமே ரேஷன் கார்டில் திருத்தம் கோரி விண்ணப்பிக்க முடியுமாம். மேலும், ரேஷன் கார்டு PDF, டூப்ளிகேட் ரேஷன் கார்டு பெறவும் ஆண்டுக்கு 2 முறை மட்டுமே விண்ணப்பிக்கும் முறை விரைவில் வரவுள்ளது. ஊழியர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. SHARE IT.
News October 18, 2025
மீண்டும் கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்

ஆஷஸ் தொடர் நவ.21-ல் தொடங்கவிருக்கிறது. இதில் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதவுள்ளன. பாட் கம்மின்ஸுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ஆஸி., அணிக்கு அவர் தலைமை தாங்குவது கடினம் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஆஸி கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை களமிறக்க முடிவு செய்துள்ளதாக தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.