News April 22, 2025
ஓடும் பஸ்ஸில் இளம் ஜோடி அட்ராசிட்டி

நவிமும்பையில் ஓடும் அரசு பஸ்ஸில், ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஸ்ஸில் கூட்டம் இல்லாத நிலையில், பின்சீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது. டிராபிக்கில் பஸ் நின்றபோது, பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் இதை வீடியோ எடுத்து பதிவிட, விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்து, கண்டக்டர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தரங்கம் அவரவர் உரிமை, ஆனால், பொது இடத்தில் இப்படி செய்யலாமா?
Similar News
News April 23, 2025
வீட்டு மின்நுகர்வோரின் நிலைக்கட்டணம் ரத்து: அரசு

வீட்டு மின்நுகர்வோரின் நிலைக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மின்கட்டண திருத்தத்தில் இருந்து நுகர்வோர்களுக்கு பல்வேறு சலுகைகள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார். திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது போல, நிலைக்கட்டணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News April 23, 2025
இதற்குதான் பாஜகவோடு கூட்டணி.. இபிஎஸ் புது பிளான்!

பாஜகவுடனான கூட்டணிக்கு பிறகு முதல்முறையாக அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் (ஏப்.25) இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என விளக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். இது திமுகவை வீழ்த்துவதற்கான கூட்டணி மட்டுமே, பாஜகவின் கொள்கைகளை அதிமுக ஒருபோதும் ஏற்காது என சிறுபான்மையினரை சந்தித்து விளக்க வேண்டுமென நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
News April 23, 2025
26-ம் தேதி போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிசடங்கு

போப் பிரான்சிஸ் உடலுக்கு வருகிற 26ம் தேதி காலை 10 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 2 நாட்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து அவரின் உடல் வாடிகனில் உள்ள தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.