News April 22, 2025
அமைச்சர் PTR-க்கு அறிவுரை வழங்கிய முதல்வர்

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். அமைச்சர் PTR அறிவார்ந்த வாதங்களை வைக்கக் கூடியவர் என்றும் அவரது சொல்லாற்றல் அவருக்கு பலமாக இருக்க வேண்டுமே தவிர பலவீனமாகி விடக்கூடாது என்றும் முதல்வர் பேசினார். இதை நான் ஏன் சொல்கிறேன் என்று அவருக்கு தெரியும் என்றும் முதல்வர் அழுத்தமாக குறிப்பிட்டார்.
Similar News
News January 31, 2026
மாம்பழம் சின்னம் யாருக்கு?

மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ECI அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி, ராமதாஸ் தரப்பு சென்னை HC-ல் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 2-ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்ய முடியாமல் தவித்து வரும் ராமதாஸ் தரப்பு, இந்த வழக்கின் தீர்ப்புக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
News January 31, 2026
4,00,000,000,000 ரூபாய் மோசடி.. சற்றுமுன் ED அதிரடி கைது

40 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்(RCOM) நிறுவனத்தின் Ex தலைவர் புனித் கார்க்கை ED அதிரடியாக கைது செய்துள்ளது. ED அறிக்கையின்படி 2001 – 2025 வரை RCOM-ன் முக்கிய பொறுப்புகளிலிருந்த புனித் கார்க், சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் புனித் கார்கேவின் 11 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
News January 31, 2026
ரஷ்ய பெண்களுடன் உறவு.. பில் கேட்ஸுக்கு பாலியல் நோயா?

சமீபத்தில் வெளியான<<19008416>> எப்ஸ்டீனின் ஆவணங்களில்<<>> பில் கேட்ஸ் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய பெண்களுடன் பில்கேட்ஸ் படுக்கையை பகிர்ந்ததால், அவருக்கு பாலியல் ரீதியான நோய் ஏற்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைக்க அவரது மனைவிக்கு ஆன்டிபயாட்டிக்கை அவர் கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை கேட்ஸ் தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது.


