News April 22, 2025
கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை – தெற்கு ரயில்வே

சென்னையில் கடந்த 19ஆம் தேதி புறநகர் ஏசி ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் இன்று (ஏப்.22) இந்த ரயில் சேவை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில், அலுவலக நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்கவும், கட்டணத்தை குறைக்கவும் பயணிகள் வலியுறுத்தினர். இதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம், ‘புறநகர் ஏசி ரயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளது.
Similar News
News April 23, 2025
விமான நிலையத்தில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

சென்னை விமான நிலையத்தில், ஏ.டி.சி. எனப்படும் விமான போக்குவரத்து தகவல் கட்டுப்பாட்டு கோபுரம் செயல்படுகிறது. இங்கு, காலியாக உள்ள ஏ.டி.சி., இளநிலை அதிகாரிகளுக்கான 309 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. வயது 27க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 25ஆம் தேதிதான் கடைசி நாள். கூடுதல் விபரங்களை www.aai.aero இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News April 23, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (22.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*.
News April 22, 2025
சென்னையில் திகிலூட்டும் 6 இடங்கள்

▶️ டீமான்டி காலனி – ஆழ்வார்பேட்டை
▶️ உடைந்த பாலம் – பெசன்ட் நகர்
▶️ நிழல் வழிச்சாலை – பெசன்ட் நகர்
▶️ வால்மீகி நகர் – திருமான்மியூர்
▶️ விக்டோரியா விடுதி சாலை – சேப்பாக்கம்
▶️ ப்ளூ கிராஸ் ரோடு – பெசன்ட் நகர்
உங்களுக்கு திகில் நிறைந்த அனுபவம் பிடிக்கும் என்றால், இங்கெல்லாம் நீங்கள் அழைத்து செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு ஷேர் செய்து திகில் அனுபவத்தை பெறுங்கள்.