News April 22, 2025
அண்ணாமலையை MP ஆக்க பேச்சுவார்த்தை

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையை ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா MP ஆக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக, கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டால் அண்ணாமலை MP-யாக நாடாளுமன்றம் செல்வார்.
Similar News
News April 23, 2025
ஏஐ வீடியோவால் எரிச்சலான விஜே ரம்யா

பிரபல தொகுப்பாளரான ரம்யா, அவ்வப்போது திரைப்படங்களிலும் தலையை காட்டி வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாவில் கோபத்துடன் பதிவிட்டுள்ள அவர், ஏஐ மூலம் தனது வீடியோவை 3-வது முறையாக குரல் மாற்றம் செய்து தவறாக பயன்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் விஜே ரம்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News April 23, 2025
வாரிசு என்று சொன்னாலே சிலருக்கு எரிகிறது: CM

வாரிசு என்று சொன்னாலே சிலருக்கு எரிகிறது என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பி.டி.ராஜன் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ‘பி.டி.ராஜனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டும் வாரிசு அல்ல, தானும் வாரிசுதான் என்றார். மேலும், இங்கே இருப்பவர்கள் எல்லோரும் திராவிட வாரிசுகள் எனத் தெரிவித்த அவர், சிலருக்கு எரியட்டும் என்பதற்காகவே வாரிசு என்பதை திரும்ப திரும்ப சொல்வதாகக் குறிப்பிட்டார்.
News April 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 315 ▶குறள்: அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.▶பொருள்: பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.