News April 22, 2025
ஜேடி வான்ஸ் சொன்ன செய்தி.. இந்தியாவிற்கு சாதகம்?

அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் வரைவை இருநாடுகளும் இறுதி செய்துவிட்டதாக USA துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய நலன்களுக்காக பிரதமர் மோடியின் அரசாங்கம் கடுமையாக பேரம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே, அது இந்தியாவிற்கு சாதகமாக இருக்குமா என்பது தெரியவரும்.
Similar News
News September 19, 2025
விரைவில் மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூல்

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும், முதற்கட்டமாக 1.5 கோடி மீட்டர்கள் தான் பொருத்தப்பட உள்ளன. இவை பொருத்தப்பட்டதும், மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படும். அடுத்த 9 ஆண்டுகளுக்கு ஒப்பந்த நிறுவனங்களே இந்த மீட்டர்களை பராமரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
News September 19, 2025
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்

உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்க, தினசரி சில உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன உணவுகள் என்பதை மேலே உள்ள புகைப்படங்களில் குறிப்பிட்டுள்ளோம். படங்களை swipe செய்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த பயனுள்ள தகவலை உங்கள் அன்பானவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
News September 19, 2025
டெபாசிட் கட்டு.. பொதுக்கூட்டம் நடத்து: கோர்ட்

பொதுக்கூட்டங்கள் நடத்த விரும்பும் அரசியல் கட்சிகளிடம் செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எந்த ஒரு பெரிய பொதுக்கூட்டங்களின் போதும், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடப்பது உண்டு எனவும், அந்த இழப்பை ஈடுகட்ட பாதுகாப்பு தொகை வசூலிப்பது அவசியம் என்றும் கூறியுள்ளது. மேலும், இதற்கான விதிமுறைகளை போலீஸ் வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.