News April 22, 2025

தவெகவினருக்கு தலைமை உத்தரவு

image

2026 தேர்தலை நோக்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், விஜய்யின் வாகன பிரச்சாரத்திற்கு முன்னதாக, கொள்கை குறித்து கட்சி நிர்வாகிகள் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளது. கட்சித் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தவெக கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 9, 2026

திமுகவின் இழுபறிக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

image

திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்காதது குறித்து காங்., வெளிப்படையாகவே அதிருப்தியை தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இப்போதே கூட்டணியை உறுதிப்படுத்தினால் ஊடகங்களில் இதுபற்றிய செய்தியே அதிகம் வரும். எனவே, ‘மீண்டும் ஸ்டாலின்’ என்ற பிம்பத்தை மக்களிடத்தில் கொண்டு செல்ல முடியாது என்பதால் இம்மாத இறுதியில் குழு அமைக்கலாம் என CM ஸ்டாலின் கூறியதாக இண்டியா கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News February 9, 2026

திரிஷா மாதிரி மனைவி வேணும்.. Watermelon ஸ்டார்

image

தனக்கு த்ரிஷா மாதிரி ஒரு மனைவி அமைந்தால் நன்றாக இருக்கும் என பிக்பாஸ் புகழ் திவாகர் கூறியுள்ளார். மேலும், தனக்கு நடிகை தமன்னாவையும் மிகவும் பிடிக்கும் எனவும் அவர் வெட்கத்துடன் கூறியுள்ளார். மேலும், தான் எங்கு பெரிய ரொமாண்டிக் ஹீரோ ஆகிவிடுவேனோ என்ற பயத்தில், சிலர் தேவையில்லாமல் தன்னை வயதானவன் என பொய் செய்திகளை பரப்பி வருவதாகவும் அவர் குமுறியுள்ளார்.

News February 9, 2026

தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் ₹15,000 மாறியது

image

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று (பிப்.9) உயர்ந்துள்ளது. 1 கிராம் ₹15 உயர்ந்து ₹300-க்கும், 1 கிலோ வெள்ளி ₹15,000 உயர்ந்து ₹3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. ஒரேநாளில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது, இன்று நகை வாங்க நினைத்தோருக்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. அதேநேரம் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!