News April 22, 2025

ஈரோடு: ஆடுக்கு ரூ.6,000, மாடுக்கு ரூ.37,000!

image

நாய் கடித்து இறக்கும் ஆடுகளுக்கு ரூ.6,000, கோழிக்கு ரூ.200, மாட்டிற்கு ரூ.37,500 இழப்பீடு வழங்க அரசு அறிவித்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2024 செப்., முதல் கடந்த ஜன., வரை நாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு ரூ.6,000 இழப்பீடு வழங்கும் பணி துவங்கியது. மக்களே, உங்களது கால்நடைகள் நாய் கடித்து இறந்தால், உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பதிவு செய்தால் தான் இழப்பீடு கிடைக்கும் (SHARE பண்ணுங்க)

Similar News

News August 22, 2025

ஈரோடு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம், இன்று ஆக.,22/கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4(A.M.திருமண மண்டபம், செட்டிபாளையம்), புஞ்சை புளியம்பட்டி நகராட்சி(கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பு.புளியம்பட்டி), காஞ்சிக்கோயில் பேரூராட்சி(தங்கம் மஹால், காஞ்சிக்கோயில்), வெங்கம்பூர் பேரூராட்சி(திருமகள் திருமண மண்டபம், வெங்கம்பூர்).

News August 22, 2025

ஈரோட்டில் பருவ காய்ச்சலை தடுக்க நடவடிக்கை!

image

ஈரோட்டில் பருவகால காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் குடிநீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். 3 நாளுக்கும் மேலாக காய்ச்சல், இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். வீடுகளுக்கு அருகில் தண்ணீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்திருக்கவும், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

News August 22, 2025

ஈரோடு பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️ஈரோடு மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0424-2214282 ▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441▶️ Toll Free -1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!