News April 22, 2025

கவலைக்கிடமான நிலையில் உதவி கேட்கும் தமிழ் நடிகர்

image

புற்று நோயால் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வரும் நடிகர் சூப்பர் குட் <<16171338>>சுப்பிரமணி <<>>மீண்டும் உதவி கேட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று அவர் கோரிக்கை விடுத்த நிலையில், இதுவரை யாரும் உதவி செய்யவில்லை. இந்நிலையில், மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி & வீட்டு வாடகைக்கு பணம் இல்லை. வசதி படைத்த நடிகர்கள் & அரசு தனக்கு உதவ வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News April 23, 2025

அவர்கள் மனிதர்கள் அல்ல… விலங்குகள்: உமர் அப்துல்லா

image

தங்கள் மாநிலத்திற்கு விருந்தினர்களாக வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் அருவருப்பானது என J&K CM உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் மனிதர்கள் அல்ல, விலங்குகள் எனவும், அவர்களை கண்டிக்க வார்த்தைகள் மட்டும் போதாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், சமீப காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மிகவும் கொடியது எனவும் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

மத்திய அரசு வெற்றுக் கூச்சலிட வேண்டாம்: ராகுல்

image

J&K-வில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என ராகுல் காந்தி கண்டித்துள்ளார். அங்கு நிலைமை சீராக இருப்பதாக வெற்று கூச்சலிடாமல், மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும், வருங்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சாமனியர்களின் உயிர் இப்படி பறிபோவதை தடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

News April 23, 2025

நள்ளிரவு வரை மழை கொட்டப் போகுது..!

image

தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!