News April 22, 2025
ஜேசிபி ஓட்டுநர்களுக்கு ஓர் நற்செய்தி!

சிவகங்கை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ், ஜே.சி.பி இயந்திரங்களை இயக்குவதற்கு தகுதியுடைய திறன் பெற்ற விருப்பமுள்ள ஓட்டுநர்கள், சிவகங்கை மற்றும் காரைக்குடியிலுள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவகத்தினை 9080230845 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
சிவகங்கை: 10th போதும் அரசு பள்ளி வேலை., மீண்டும் வாய்ப்பு!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News December 5, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளின் கவனத்திற்கு

சிவகங்கை: மானாமதுரை, காரைக்குடி வழியாக இயங்கும் வண்டி எண். 16751 சென்னை எழும்பூர்-இராமேஸ்வரம் விரைவு வண்டி (Boat Mail), மற்றும் வண்டி எண்.22661 எழும்பூர்-இராமேஸ்வரம் சேது அதிவிரைவு வண்டி ஆகியவை தற்காலிகமாக நாளை முதல், டிசம்-15 வரை தாம்பரம் வரை இயங்கும், எழும்பூர் செல்லாது. சிவகங்கை மாவட்ட பயணிகள் இதற்கு தகுந்தமாதிரி பயணத்தை அமைத்து கொள்ளலாம் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
News December 5, 2025
சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; 20 ஆண்டுகள் சிறை

மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளி குமார் (எ) ராஜ்குமார் (35),மானாமதுரை சேர்ந்த 17வயது சிறுமியை கடத்தி சென்று கொடைக்கானலில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 3 நாட்களுக்கு பிறகு போலீசார் சிறுமியை மீட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றவாளி குமார் (எ) ராஜ்குமாருக்கு 20ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ₹3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்


