News April 22, 2025
சேலம் கள்ளத்துப்பாக்கி ரூ 3 லட்சம் அபராதம்

சேலம் மஞ்சவாடி காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் வகையில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த சேலத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 39), சுகில் குமார் (வயது 30) ஆகிய இருவரை கைது செய்த வனத்துறையினர் இருவருக்கும் தலா ரூபாய் 1.50 லட்சம் அபராதம் விதித்தனர். வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்தனர்.
Similar News
News April 22, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

சேலம் மாவட்டத்தில் இன்று (22.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்கள், திருட்டு, சந்தேக நபர்கள் குறித்து சேலம் அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்.
News April 22, 2025
சேலம் மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு!

கோடை விடுமுறை காலம் தொடங்கியுள்ளதையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில், குழந்தைகள் இறங்காமல் கவனமுடனும், எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதை பெற்றோர் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டுமென தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதை, உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 22, 2025
ஏப்.25-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

சேலம் மாவட்டத்தில் ஏப்ரல் 2025 மாதாந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215-ல் நடைபெற உள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.