News April 22, 2025

வர்ணனை செய்ய தடை? மௌனம் கலைத்த ஹர்ஷா

image

கொல்கத்தா மைதானம் குறித்து தெரிவித்த கருத்தால், அங்கு நடைபெறும் போட்டிகளில் வர்ணனை செய்ய தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு <<16168983>>ஹர்ஷா போக்லே<<>> மறுப்பு தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தாவில் நடக்கும் 2 போட்டிகளுக்கு மட்டுமே தான் வர்ணனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், குடும்ப சூழல் காரணமாக நேற்றைய போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Similar News

News April 23, 2025

தோசை சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

image

கேரளாவில் மசால் தோசை சாப்பிட்ட 3 வயது சிறுமி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஹென்றி என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 19-ம் தேதி, அங்கமாலியில் உள்ள உணவகத்தில் மசால் தோசை சாப்பிட்டுள்ளார். வீடு திரும்பிய உடன் உடல்நலக் குறைவு ஏற்படவே, அனைவரும் ஹாஸ்பிடல் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒலிவியா (3) உயிரிழந்தார். இதற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 23, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 23- சித்திரை- 10 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 5:00 PM – 6:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶ குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: ஏகாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: தேய்பிறை

News April 23, 2025

விருதுகளை விட இதுதான் முக்கியம்: சாய் பல்லவி

image

குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சாய் பல்லவி. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், விருதுகள் கிடைப்பதை விட ரசிகர்களின் அன்பை பெறுவதற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். திரையரங்கில் தனது கதாபாத்திரங்களை கண்டு அந்த எமோஷனுடன் ரசிகர்கள் தங்களை இணைத்துக் கொள்வதையே உண்மையான வெற்றியாக பார்க்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!