News April 22, 2025
17 வயது சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது பாய்ந்த போக்சோ

காட்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது, சிறுமியின் உறவினரான சீமான் (30) என்பவருடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. புகார் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 19, 2025
வேலூர் மாவட்ட அரசியல் கட்சி நீக்கம்

2019ஆம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தலில் போட்டியிடாத வேலூரை சேர்ந்த ‘டாக்டர் அம்பேத்கர் பீப்பிள் ரெவலூசன் மூவ்மென்ட்’ கட்சியினை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி சார்பில் விளக்கம் அளிக்கவில்லை என்றால் நீக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஆகஸ்ட்-18) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.
News August 18, 2025
வேலூர் விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவித்துள்ளார்.