News April 22, 2025
வெளிநாட்டுபணத்துடன் கிடந்த பர்ஸ் உரிமையாளரிடம் ஓப்படைப்பு

புதுகையில் இன்று (ஏப்.22) புதுநகர் பகுதியில் கிடந்த பர்ஸில் பத்தாயிரம் பணம்,சிங்கப்பூர் டாலர் 15 வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்களுடன் பர்ஸ் கீழே கிடந்தை சாலையோர வியாபாரி நாகூர் கனி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து, மச்சுவாடி உண்டியல் பகுதியை சேர்ந்த குணசேகரன் ரமேஷ் என்ற நபரிடம் சமூக ஆர்வலர் தினேஷ் கலை செல்வம் ஆகியோர் காவல்துறை அதிகாரிகள் முன் பர்ஸ் உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை நபர்.
Similar News
News January 17, 2026
புதுகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு புதுகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News January 17, 2026
புதுக்கோட்டை: மது விற்ற இரண்டு பேர் கைது!

விராலிமலை பேருந்து நிலையம் அருகே அனுமதி இன்றி மது விற்கப்படுவதாக விராலிமலை காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவல் எடுத்து அப்பகுதியில் சென்று கண்காணிக்க பணியில் ஈடுபட்ட போது டாஸ்மார்க் அருகே மணமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52), மாதிரிபட்டி டாஸ்மார்க் கடை அருகே மதுவிற்ற திருநல்லூர் ராமலிங்கம் (31) ஆகிய இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 106 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
News January 17, 2026
புதுக்கோட்டை: பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

கந்தர்வகோட்டை அடுத்த துருசுபட்டியைச் சேர்ந்தவர் நீலாவதி (50). இவர் நேற்று துருசுப்பட்டியில் உள்ள காட்டுப்பகுதி வழியே சென்றுள்ளார். அப்போது அவருக்கு பாம்பு கடித்துள்ளது. இதனை அடுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சகோதரி கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


