News April 22, 2025
சுற்றுலா பயணிகளை நாட்டுப் படகில் ஏற்றினால் நடவடிக்கை

கோடை விடுமுறை துவங்கியதால் தொண்டி கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மீன்பிடி படகுகளில் சில மீனவர்கள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பெற்றுக் கொண்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். ஒரு படகில் 20-க்கும் மேற்பட்டோர் செல்வதால் ஆபத்து ஏற்படுகிறது. இதனால் மரைன் காவல்துறையினர் சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
Similar News
News August 24, 2025
BREAKING இராமநாதபுரம் சாலை விபத்தில் இருவர் பலி

இராமநாதபுரம் மாவட்டம் களக்குடி அருகே இன்று (ஆகஸ்ட்.24) புதுக்கோட்டையில் இருந்து வந்த கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு பேரில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
News August 24, 2025
BREAKING: பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர்

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள தூக்கு பாலம் 110 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலம் பல்வேறு புயல்களை எதிர்கொண்டு தனது வலிமையும், பொறியியல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது பாம்பன் பாலம் 4 மாதங்களில் விடைபெற தயாராகியது.
News August 24, 2025
ராம்நாடு: இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

ராம்நாடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️ராமநாதபுரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04567-230444 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க.