News April 22, 2025
கார்ட்டூன் மூலம் செந்தில் பாலாஜியை விமர்சித்த அதிமுக

ஒவ்வொரு மானியக் கோரிக்கையின்போதும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மரியாதை செய்வது வழக்கம். இன்று மதுவிலக்கு & ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை நடைபெறும் நிலையில், கருணாநிதி சமாதியில் Decoration-லாம் கரெக்ட்டா பண்ணியாச்சா “தியாகி” அமைச்சரே? என்று கேள்வியுடன் குவாட்டருக்கு ₹10 EXTRA என அதிமுக கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.
Similar News
News September 11, 2025
நேபாளத்தின் இடைக்கால பிரதமராகும் குல்மன் கிசிங்!

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக மின்சார ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் குல்மன் கிசிங் தேர்வாகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. Social Mediaவுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அந்நாட்டில் Gen-Z போராட்டம் வெடித்தது. இதனால் பிரதமராக இருந்த சர்மா ஒலி, குடியரசு தலைவர் ராம் சந்திர பவுடல் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், இடைக்கால பிரதமராக குல்மன் கிசிங் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.
News September 11, 2025
அரசியல் கட்சிகளில் குடும்ப தகராறு: ஒரு பார்வை PHOTOS

கட்சியின் வளர்ச்சியை தடுப்பதாக கூறி, அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கியுள்ளார் ராமதாஸ். இப்படி, ஒரே குடும்ப உறவுகளுக்குள் வெடிக்கும் அரசியல் மோதல் தமிழகத்துக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி புதிதல்ல. இதற்கு முன்பே எந்தெந்த கட்சிகளில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது? என்பது குறித்து மேலே உள்ள படங்களை Swipe செய்து பாருங்கள். பார்த்த பிறகு, உங்களின் கருத்துகளை கமெண்ட் பண்ணுங்க.
News September 11, 2025
₹5,000 வரை உயர்ந்தது.. மக்கள் அதிர்ச்சி

வீட்டு வாடகை உயர்வு சென்னைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ₹10,000 – ₹15,000 வரை இருந்த 2BHK வீடுகள், இப்போது ₹20,000 – ₹25,000 வரை உயர்ந்துள்ளது. போரூர், கிண்டி, நந்தனம், அண்ணாநகரில் 2BHK வீடுகளின் வாடகை சுமார் ₹16,000 – ₹22,000 வரை உயர்ந்துள்ளது. சில பகுதிகளில் இந்த வாடகை உயர்வு இன்னும் அதிகமாக உள்ளது. இதனால், நடுத்தர வர்க்கத்தினர் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உங்க ஊரில் வாடகை எவ்வளவு?