News April 22, 2025
வீரதீர செயல்களுக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை, காவல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை முதல் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம்வரை போலீஸ் அதிகாரிகள் செய்த வீரதீர செயல்களை பட்டியலிட்டு இந்த விருதுக்கு அனுப்ப, பரிந்துரைகளை வரும் 24ம் தேதிக்குள் டில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
JUSTNOW புதுச்சேரி: பண்டிகை கால விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில், நாளை ஜன.14 போகி பண்டிகை முன்னிட்டு, புதுச்சேரி அரசின் சார்பில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜன.31 அன்று சனிக்கிழமையாக இருந்தபோதிலும், அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. போகி பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாட புதுச்சேரி அரசு வாழ்த்துகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 13, 2026
புதுச்சேரி: ஆயுளை நீடிக்கும் திருக்காமேஸ்வரர்

புதுச்சேரியில் ஸ்ரீ கோகிலாம்பாள் திருக்காமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
News January 13, 2026
புதுச்சேரி: அல்மான்ட் இருமல் மருந்திற்கு தடை

பீகார் மாநில ‘ட்ரிடஸ் ரெமிடீஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பான, ‘அல்மான்ட் கிட் சிரப்’ என்ற மருந்திற்குத் புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், இந்த சிரப்பில் சிறுநீரகத்தை மிகக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய, எத்திலீன் கிளைக்கோல் என்ற நச்சுப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட, மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதால், தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


