News April 22, 2025
2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். 8 தனியார் பல்கலைக்கழங்கள் தொடர்பான தனியார் பல்கலைக்கழங்கள் திருத்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு பொது சட்ட உரிமை திருத்த சட்ட மசோதாவுக்கும் கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
Similar News
News April 22, 2025
NEP குறித்து ஸ்டாலின் படிக்க வேண்டும்: ஃபட்னாவிஸ் பதிலடி

NEP என்றால் என்ன என்பதை மு.க.ஸ்டாலின் சரியாகப் படிக்க வேண்டும் என ஃபட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். NEP ஒருபோதும் மொழித் தேர்வை வலியுறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை. 3 மொழிகளில் ஆங்கிலத்தை தவிர வேறு 2 இந்திய மொழிகளை மட்டுமே படிக்கச் சொல்கிறது எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, மகராஷ்டிராவில் இந்திக்கு எதிர்ப்பு எழுந்ததை சுட்டிக்காட்டி ஃபட்னாவிஸ்-க்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
News April 22, 2025
IPL: DC அணிக்கு 160 ரன்கள் இலக்கு

DC-க்கு எதிரான IPL போட்டியில், LSG அணி 159 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்ற DC அணியின் கேப்டன் அக்சர் பட்டேல், LSG-ஐ பேட்டிங் செய்யப் பணித்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய LSG அணியின் தொடக்க வீரர்கள் மார்க்ரம் (52), மார்ஷ் (45) அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இருப்பினும், பின்னர் களமிறங்கியவர்கள் நிதானமாக விளையாடியதால் அந்த அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
News April 22, 2025
வெயில்: நாளை இந்த நேரத்தில் வெளியே வராதீங்க

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்.