News April 22, 2025
ஓடும் பஸ்ஸில் உடலுறவு: கண்டக்டருக்கு சிக்கல்

மும்பை அருகே ஓடும் அரசு பஸ்ஸில் ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பான்வேல் – கல்யாண் சென்ற அந்த பஸ்ஸில் கூட்டம் இல்லாததால் பின் இருக்கையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டிராபிக்கில் பஸ் நின்றபோது, பைக்கில் வந்த இளைஞர் இதை கவனித்ததுடன், வீடியோ எடுத்து போஸ்ட் செய்துள்ளார். இதனால், பஸ் டிரைவர், கண்டக்டர் ஏன் இதை தட்டிக் கேட்கவில்லை என விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News January 11, 2026
குழந்தைகளை காய்கறிகளை சாப்பிடவைக்க டிரிக்ஸ்

தற்போதுள்ள குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மறுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு நார்ச்சத்து கிடைக்காமல், நோய்வாய்ப்படுகின்றனர். அவர்களை சாப்பிடவைக்க சில டிரிக்ஸ் இருக்கு. ➤காய்கறிகளை அரைத்து சாப்பாட்டில் சேர்க்கலாம் ➤பிடித்த பழங்களை கொடுங்கள் ➤காய்களை பொம்மைகள் போல கிரியேட்டிவ்வாக வெட்டி சமைத்து கொடுக்கலாம் ➤சாப்பாட்டிலிருந்து எடுக்கமுடியாத அளவுக்கு பொடி பொடியாக காய்களை வெட்டி உணவில் சேருங்கள். SHARE.
News January 11, 2026
BREAKING: ஓபிஎஸ்ஸுக்கு விஜய் அழைப்பு

OPS தவெகவில் வந்து சேருவார் என நம்புகிறோம் என்று சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த Ex அதிமுக மா.செ., கவிதா ராஜேந்திரன் கூறியுள்ளார். அத்துடன் தளபதியும் (விஜய்) OPS-ஐ அழைத்து பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சில நிர்பந்தங்களால் இணைப்பு தாமதமாவதாகவும், இல்லையென்றால் ஜன.1-லேயே தவெகவில் OPS சேர்ந்திருப்பார் என்றும் கூறினார். தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறிவரும் OPS, அன்றைய நாளில் தவெகவில் சேர்வாரோ?
News January 11, 2026
சோனியா காந்தி டிஸ்சார்ஜ்

உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனியா காந்தி வீடு திரும்பியுள்ளார். டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நலம் முன்னேற்றம் கண்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே சிகிச்சையை தொடரவும், சிறிது நாள்கள் ஓய்வெடுக்கவும் சோனியா காந்தியை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


